Monday 24 August 2009

த்ரவ்பதியின் வரம்

பரமார்த்மா கண்ணபிரான் தன் அவதார நோக்கம் முடியும் தறுவாயில் எல்லாரிடமும் அவர்களுக்கு விர்ப்பமான வரங்களை கேட்டு/அளித்து வந்தாராம்.
அப்போ த்ரவுபதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றாராம். அதற்கு
த்ரவ்பதி சொன்னது, ' எனக்கு தினமும் துன்பங்களும், கஷ்டங்களும் வர வேண்டும் ' என்றாளாம்.
கண்ணபிரான் 'ஏன் இப்படி கேட்கிறாய்?' என்றதற்கு
அவள் 'கண்ணா உனக்கே நன்கு தெரியும். துன்பம் வரும்போதும் தான் மனிதன் இறைவனை நினைப்பான். இது மனித இயல்பு.நான் மட்டும் இதுக்கு விதிவிலக்கா?
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும்
அதுக்காக தான் இந்த வரம் கேட்கிறேன்' என்றாளாம்.

துன்பமும், கஷ்டங்களும் இல்லை என்றால் மனிதன் கடவுளை மறந்து விடுவான். கடவுளை நினைப்பவர்களுக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் வரும். ஆனால் துன்பம் வரும் நேரத்தில் நாம் கடவுளை எந்த அளவு நினைக்கிறோமோ, நம்புகிறோமோ அந்த அளவிற்கு அவர் நமக்கு அந்த துன்பத்தை தாங்கும் சக்தியும், அதற்கு ஏற்ற பலன்களையும் நிச்சயம் கொடுக்கிறார்.

(The Pandavas are five parts of Indhiran. The fame, strength, energy and beauty of Indiran born as Dharmar, Beema, Arjuna, Sahadevan & Mahadevan respectively. (The beauty is divided into two parts and took birth as Sahadevan & Mahadevan). The wife of Indhiran born as Drowpathi. That is the reason why Drowpathi has five husbands (numerically). To defeat and kill Virudhrasuran, Indiran lied and hence due to that sin he had to born as five parts in earth.)

8 comments:

  1. அந்த வரம் கேட்டது திரவுபதியா? அல்லது குந்தியா?
    என் ஞாபகத்திற்கு எட்டும் வரை குந்திதான் அந்த வரத்தைக் கேட்டார்.

    ஆங்கில வரிகளும் எங்கயோ உதைபடுகிறது...

    அன்புடன்,
    கிருஷ்ண பிரபு

    ReplyDelete
  2. தமிழில் - ஒரு புத்தகத்தில் படித்தவற்றை என் சொந்த நடையில் எழுதியுள்ளேன்.
    ஆங்கிலம் - ஈ அடிச்சான் காபி.

    ReplyDelete
  3. /--The wife of Indhiran born as Drowpathi.--/

    எதற்கும் சரி பார்த்துவிடுங்கள் தோழி. அர்ஜுனன் - இந்திரனின் மகன்.

    இந்திர லோகத்தில் தேவலோக அழகி உறவு கொள்ள அழைத்ததற்கு அர்ஜுனன் மறுத்துவிடுகிறான். நீங்கள் என்னுடைய அன்னைக்கு சமம் என்று மறுத்துவிடுகிறான். அதனால் சில வருட காலம் அர்ஜுனன் "பிரகளை" என்ற அலியாக இருக்க வேண்டி வருகிறது.

    எனக்கு என்னவோ குந்தி என்று வர வேண்டிய இடத்தில் நீங்கள் திரௌபதி என்று கூறியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  4. இது குந்தி கேட்ட வரம்.

    த்ரௌபதி இந்திரனின் மனைவி இல்லை.

    எங்கியோ ஒரு குழப்பம் இருக்கு. சரி பண்ணுங்க.

    க்ருஷ்ணப்பிரபு சொன்னது ரொம்பச் சரி.

    க்ருஷ்ணனே சொன்னபிறகு அப்பீல் ஏது:-))))))

    ReplyDelete
  5. சகாதேவன் - மகாதேவனா ? - உதைக்குதே... நகுலன் - சகாதேவன் அல்லவா ஈஸ்வரி அவர்களே ?

    ReplyDelete
  6. anmeegathula neenga week eswari

    ReplyDelete
  7. //jaisankar jaganathan said...
    anmeegathula neenga week eswari//

    ஒத்துக்கிறேன். மனதால் உணர்ந்ததை அழகாய் எழுத தெரியாமல் முழிக்கிறேன்.

    ReplyDelete
  8. very true i suffered a major health setback in march 2011 and faced near death experience. Because of divine help i have almost recovered. I have been facing immense setbacks over the past 1year but this made me move towards spiritual path and now am at peace. God has some purpose in everything. AVAN INRI ORU ANUVUM ASAYAATHU

    ReplyDelete