Saturday, 22 August 2009
விநாயகர் உணர்த்தும் தத்துவம்
யானைத் தலை, மனிதனின் உடல், மிகப்பெரிய தொந்தி, 5 கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம்... இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமான மூஞ்சுறு இப்படி ஒரு கலவை விநாயகர்.
உருவத்தால் வித்தியாசமாக இருக்கும் விநாயகருக்கான வழிப்பட்டு முறைகளும் கொஞ்சம் வித்தியாசம் தான். சிதறு தேங்காய் உடைப்பது, தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது....
விநாயகர் உருவத்துக்கும் சரி, அவருக்கென வழங்கப் படும் வழிப்பாட்டு முறைகளுக்கும் சரி, தத்துவ பின்னணிகள் உண்டு. விநாயகர் ஓங்கார வடிவினர். யானையின் தும்பிக்கை கூட இவர் ஓங்கார வடிவினர் என்பதை காட்ட கூடியதே.
காதுகள்:
விநாயகரின் காதுகள் முறம் போல இருக்கின்றன. முறத்தால் புடைக்கும் போது உமி நீங்கி அரிசி மட்டுமே இருக்கும். அதாவது முறம் தீமையை நீக்கி நல்லதை மட்டுமே கிரகித்து கொல்கிறது. அதுபோலவே மனிதனும் நல்லது மட்டுமே கொள்ள வேண்டும் என்பது விநாயகரின் காதுகள் காட்டும் தத்துவமாகும்.
யானைத் தலை:
யானைத் தலைக்கு பல விசேசங்கள் உண்டு. அக்காலத்தில் பெரியவர்களிடம் பேசும் போது உதடுகளை பொத்திக்கொண்டு பேசுவார்கள். இது பணிவின் அடையாளம். இந்த தத்துவத்தை யானையின் வாய் காட்டுகிறது. பேச்சை குறைப்பது முக்கியம். மவுனம் மேலான யோகம் என்பதை சொல்லாமல் சொல்கிறது யானையின் தலை.
தந்தம்:
விநாயகருக்கும் ஒரு தந்தம் முறிந்து இருக்கும். அதுக்கு பல காரணங்கள்/கதைகள் சொல்வார்கள். அதன் தத்துவம்
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விசேசம். மயிலுக்கு தொகை, மானுக்கு கொம்பு, அதுபோல் யானையின் உறுப்பில் மேலானது, உயர்ந்தது தந்தம். எதையாவது இழந்தால் தான் ஒன்றினை சாதிக்க முடியும். விநாயகர் தன்னிடமுள்ள உயர்வான பொருட்களில் ஒன்றான தந்தத்தை இழந்து தர்மத்தை நிலை நிறுத்தினார் என்பதே அந்த கதைகளில் உள்ள தத்துவம்
மூஞ்சுறு:
பெரிய சரீரம் உள்ள விநாயகரை சிறிய மூஞ்சுறு எப்படி தாங்குகிறது?
புராணத்தில் அசுரன் ஒருவன் மூஞ்சுறு ஆனான் என்ற தகவல் உள்ளது.
தத்துவப்படி பார்த்தால் விநாயகர் யோகா சக்திக்கு அதிபதி. மூலாதரத்திலிருந்து யோகாக்னி எழும் நிலையில் மொறு மொறுவென்று ஒரு ஓசை வரும். அந்த ஒலியும், பெருச்சாளியின் ஒலியும், ஒன்றாக இருக்கும் என்பது யோகிகளின் வாக்கு. மூஞ்சுரின் மேல் விநாயகர் இருக்கிறார் என்பது மூலதார சக்தியின் மீது விநாயகர் இருக்கிறார் என்பதை காட்டும் குறியீடாகும்.
பெரிய உடம்பை சிறிய வாகனம் தாங்குகிறது. எதனால்? அவர் உடலை லேசாக்கி அமர்கிறார். அது போல தன்னை தாங்கும் பக்தர்களின் மனதிலும் எந்த கஷ்டங்களும் அழுத்தாமல் உட்காருவார் என்பதை இந்த அமைப்பு காட்டுகிறது.
வழிப்பட்டு அமைப்புகள்:
வழிப்பாட்டு அமைப்புகள் கூட வித்தியாசமானவை, உடலுக்கு நன்மை தருபவை. தலையில் குட்டிக் கொள்வதும், தோப்பு கரணம் போடுவதும், யோக சக்தியை வளர்க்கக் கூடியவை.
இப்படி எல்லா வகைகளிலும் விநாயகர் தத்துவ முத்திரைகளின் வெளிப்பாடகவே காட்சி தருகிறார்.
நன்றி - தினமலர் - பக்தி மலர்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல இடுகைகள் உங்களுடையது.கூடுமான வரையில், விஷயம் வேறேங்கிருந்தாவது எடுக்கப் பட்டதாக இருந்தாலும் அதை உங்களுடைய நடையில் எழுதினால் மகிழ்ச்சி.தயவு செய்து எழுத்துப் பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.படிப்பவர்களுக்கு ஆர்வம் குறையாமல் இருக்கும்.இது கண்டிப்பாக அறிவுரை அல்ல.தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.தயவு செய்து word verification என்கிற option ஐ எடுத்து விடுங்கள்.தவறான அல்லது தேவையற்ற பின்னூட்டங்களை மட்டுப் படுத்த இது உதவாது.பின்னூட்டங்களை approval க்கு பின்னால் வெளியிடும்படி செய்து கொள்ளலாமே?நன்றி.
ReplyDeleteநன்றி ஸ்ரீ. நானும் இதுபோல பின்னூட்டங்களையே எதிர்பார்க்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை திருத்தியுள்ளேன்.
ReplyDeleteமுதல் பதிவு, அதுவும் கடவுளை பற்றியது. என் நடையில் எதாவது தப்பு தப்பா எழுத வேண்டாம் ன்னு தான் புத்தகத்தில் இருந்ததை கொஞ்சம் சுருக்கி என் பதிவில் போட்டேன். எழுத்து பிழைகளையும் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.
பாராட்டுக்கள் அம்மா! பிள்ளையாரை பற்றிய தகவல்கள் அற்புதம்.இன்னும் கூட அவருக்கே உரித்தான தோப்புக்கரன அறிவியல் ரகசியங்களை எழுதினால் மிகவும் பயன் உடையதாக இருக்கும் அம்மா.வாழ்த்துக்கள் தாயே!!!
ReplyDeleteஅடியார்க்கும் அடியேன்,
சிவபாரதி