Monday, 24 August 2009

த்ரவ்பதியின் வரம்

பரமார்த்மா கண்ணபிரான் தன் அவதார நோக்கம் முடியும் தறுவாயில் எல்லாரிடமும் அவர்களுக்கு விர்ப்பமான வரங்களை கேட்டு/அளித்து வந்தாராம்.
அப்போ த்ரவுபதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றாராம். அதற்கு
த்ரவ்பதி சொன்னது, ' எனக்கு தினமும் துன்பங்களும், கஷ்டங்களும் வர வேண்டும் ' என்றாளாம்.
கண்ணபிரான் 'ஏன் இப்படி கேட்கிறாய்?' என்றதற்கு
அவள் 'கண்ணா உனக்கே நன்கு தெரியும். துன்பம் வரும்போதும் தான் மனிதன் இறைவனை நினைப்பான். இது மனித இயல்பு.நான் மட்டும் இதுக்கு விதிவிலக்கா?
நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும்
அதுக்காக தான் இந்த வரம் கேட்கிறேன்' என்றாளாம்.

துன்பமும், கஷ்டங்களும் இல்லை என்றால் மனிதன் கடவுளை மறந்து விடுவான். கடவுளை நினைப்பவர்களுக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் வரும். ஆனால் துன்பம் வரும் நேரத்தில் நாம் கடவுளை எந்த அளவு நினைக்கிறோமோ, நம்புகிறோமோ அந்த அளவிற்கு அவர் நமக்கு அந்த துன்பத்தை தாங்கும் சக்தியும், அதற்கு ஏற்ற பலன்களையும் நிச்சயம் கொடுக்கிறார்.

(The Pandavas are five parts of Indhiran. The fame, strength, energy and beauty of Indiran born as Dharmar, Beema, Arjuna, Sahadevan & Mahadevan respectively. (The beauty is divided into two parts and took birth as Sahadevan & Mahadevan). The wife of Indhiran born as Drowpathi. That is the reason why Drowpathi has five husbands (numerically). To defeat and kill Virudhrasuran, Indiran lied and hence due to that sin he had to born as five parts in earth.)

Saturday, 22 August 2009

விநாயகர் உணர்த்தும் தத்துவம்யானைத் தலை, மனிதனின் உடல், மிகப்பெரிய தொந்தி, 5 கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம்... இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமான மூஞ்சுறு இப்படி ஒரு கலவை விநாயகர்.

உருவத்தால் வித்தியாசமாக இருக்கும் விநாயகருக்கான வழிப்பட்டு முறைகளும் கொஞ்சம் வித்தியாசம் தான். சிதறு தேங்காய் உடைப்பது, தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது....

விநாயகர் உருவத்துக்கும் சரி, அவருக்கென வழங்கப் படும் வழிப்பாட்டு முறைகளுக்கும் சரி, தத்துவ பின்னணிகள் உண்டு. விநாயகர் ஓங்கார வடிவினர். யானையின் தும்பிக்கை கூட இவர் ஓங்கார வடிவினர் என்பதை காட்ட கூடியதே.

காதுகள்:
விநாயகரின் காதுகள் முறம் போல இருக்கின்றன. முறத்தால் புடைக்கும் போது உமி நீங்கி அரிசி மட்டுமே இருக்கும். அதாவது முறம் தீமையை நீக்கி நல்லதை மட்டுமே கிரகித்து கொல்கிறது. அதுபோலவே மனிதனும் நல்லது மட்டுமே கொள்ள வேண்டும் என்பது விநாயகரின் காதுகள் காட்டும் தத்துவமாகும்.

யானைத் தலை:
யானைத் தலைக்கு பல விசேசங்கள் உண்டு. அக்காலத்தில் பெரியவர்களிடம் பேசும் போது உதடுகளை பொத்திக்கொண்டு பேசுவார்கள். இது பணிவின் அடையாளம். இந்த தத்துவத்தை யானையின் வாய் காட்டுகிறது. பேச்சை குறைப்பது முக்கியம். மவுனம் மேலான யோகம் என்பதை சொல்லாமல் சொல்கிறது யானையின் தலை.

தந்தம்:
விநாயகருக்கும் ஒரு தந்தம் முறிந்து இருக்கும். அதுக்கு பல காரணங்கள்/கதைகள் சொல்வார்கள். அதன் தத்துவம்
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விசேசம். மயிலுக்கு தொகை, மானுக்கு கொம்பு, அதுபோல் யானையின் உறுப்பில் மேலானது, உயர்ந்தது தந்தம். எதையாவது இழந்தால் தான் ஒன்றினை சாதிக்க முடியும். விநாயகர் தன்னிடமுள்ள உயர்வான பொருட்களில் ஒன்றான தந்தத்தை இழந்து தர்மத்தை நிலை நிறுத்தினார் என்பதே அந்த கதைகளில் உள்ள தத்துவம்மூஞ்சுறு:
பெரிய சரீரம் உள்ள விநாயகரை சிறிய மூஞ்சுறு எப்படி தாங்குகிறது?
புராணத்தில் அசுரன் ஒருவன் மூஞ்சுறு ஆனான் என்ற தகவல் உள்ளது.
தத்துவப்படி பார்த்தால் விநாயகர் யோகா சக்திக்கு அதிபதி. மூலாதரத்திலிருந்து யோகாக்னி எழும் நிலையில் மொறு மொறுவென்று ஒரு ஓசை வரும். அந்த ஒலியும், பெருச்சாளியின் ஒலியும், ஒன்றாக இருக்கும் என்பது யோகிகளின் வாக்கு. மூஞ்சுரின் மேல் விநாயகர் இருக்கிறார் என்பது மூலதார சக்தியின் மீது விநாயகர் இருக்கிறார் என்பதை காட்டும் குறியீடாகும்.

பெரிய உடம்பை சிறிய வாகனம் தாங்குகிறது. எதனால்? அவர் உடலை லேசாக்கி அமர்கிறார். அது போல தன்னை தாங்கும் பக்தர்களின் மனதிலும் எந்த கஷ்டங்களும் அழுத்தாமல் உட்காருவார் என்பதை இந்த அமைப்பு காட்டுகிறது.

வழிப்பட்டு அமைப்புகள்:
வழிப்பாட்டு அமைப்புகள் கூட வித்தியாசமானவை, உடலுக்கு நன்மை தருபவை. தலையில் குட்டிக் கொள்வதும், தோப்பு கரணம் போடுவதும், யோக சக்தியை வளர்க்கக் கூடியவை.
இப்படி எல்லா வகைகளிலும் விநாயகர் தத்துவ முத்திரைகளின் வெளிப்பாடகவே காட்சி தருகிறார்.

நன்றி - தினமலர் - பக்தி மலர்.